தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா உறுதி - இன்று ஒரே நாளில் 358 பேர் உயிரிழப்பு

10 June 2021

தமிழகத்தில் புதிதாக இன்று 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் புதிதாக 1,223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 2,236 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,390 பேருக்கு தொற்று உறுதி.

1,81,920 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

32,049 பேர் குணமடைந்தனர்; 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 23,08,838

20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 28,528