குமரியில் நூதன முறையில் நகை பறிப்பு
07 November 2025
வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தங்க லட்சுமி(70). இவரது மகன் இருதய சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க தங்க லட்சுமி வந்த போது, மர்ம நபர் ஒருவர் அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி வாங்கி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.