திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

04 November 2025

திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இதனை ஒட்டி இன்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடி மரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.