தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நயினார் நாகேந்திரன்

16 February 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில், காவலர்களும் வழக்கறிஞர்களும் நிறைந்திருக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்து போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கைக் கைவிட்ட திமுக அரசை மக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவிடமாட்டார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.