தி.மு.க. அரசின் மது விற்பனை முறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
27 January 2026
குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜனவரி 25-ஆம் தேதி மட்டும் சுமார் ரூ.220.75 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, விடுமுறை தினமான ஜனவரி 26 அன்றும் கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய மறைமுக விற்பனையால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் செலவுக்காகவும் கஜானாவை நிரப்பவும் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மது விற்பனையை ஊக்குவிப்பதாக தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.