பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்
05 March 2026
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள புகழ்பெற்ற பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நரசிம்ம பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் குளத்தில் மூன்று முறை வலம் வந்த இந்த உற்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வேத பாராயணங்களும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.