கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

23 February 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்கள், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, நல்லகண்ணு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடி வருவதாக வீரபாண்டியன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.