தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
மொத்தம் 19 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவி பொறியாளர் பதவியில் 1 இடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான கல்வி தகுதி கட்டிட பொறியியலில் பொறியியல் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவியே மற்றும் பியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பில் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.
இதேபோன்று காவலர், உதவி பரிச்சாராகர் உள்ளிட்ட பதவி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 28ஆம் தேதி ஆகும்.