மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

25 January 2026

மியான்மர் நாட்டில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்திய நேரப்படி மாலை 4:13 மணியளவில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது. இது பூமியின் அடியில் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே, அதாவது மாலை 4:24 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த நில அதிர்வுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த தற்போதைய நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.