திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி ஏற்பாடுகள்

15 October 2025

மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் இந்த கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்க உள்ள இந்த கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஆறாம் திருநாள் வரை பகலில் யாகசாலை பூஜைகள் நடக்கும். மேலும் இந்த நிகழ்வுகளில் போதே சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக 27ஆம் தேதி சூரசம்காரத்துக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருச்செந்தூர் கோவில் அருகே மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கோபுரங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.