25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த கொலை முயற்சி வழக்குக் குற்றவாளி கைது

10 February 2026

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (54) என்பவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.


இவருக்கு எதிராக 2001-ம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை (Warrant) பிறப்பித்திருந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. முத்தையாபுரம் காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், கால் நூற்றாண்டு காலமாகத் தப்பித் திரிந்த சேகர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்திய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.