அதிர்ச்சி: மகனை கொன்று தாய் தற்கொலை - திருச்சூரில் நடந்த சோகம்
08 January 2026
திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகித் (34). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷில்பா (30). இவர்களுக்கு அட்சயஜித் (5) என்ற மகன் இருந்தான்.
சம்பவம் நடந்தன்று இரவு, மோகித்திற்கு காய்ச்சல் இருந்ததால் அவர் ஒரு தனி அறையில் உறங்கியுள்ளார். ஷில்பா தனது மகனுடன் மற்றொரு அறையில் படுத்திருந்தார். வீட்டில் வேறொரு அறையில் மோகித்தின் தாயாரும் தங்கியிருந்தார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஷில்பாவும் அவரது மகனும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகித் கதவைத் தட்டியும் பதில் வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அங்கு ஷில்பா தூக்கில் தொங்கிய நிலையிலும், மகன் அட்சயஜித் கட்டிலில் அசைவற்றுக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பெரமங்கலம் போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களையும் மீட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், ஷில்பா தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....