தாய் என்றும் பாராமல் கீழே தள்ளிவிட்டு கொடூர தாக்குதல் நடத்திய பெண்

30 November 2025

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடுசெட்டே கிராமத்தில் வசித்து வரும் தாய் மகள் இருவரிடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதனால் இது தொடர்பாக அந்தத் தாய் காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று மூதாட்டி சென்றபோது அவரது மகள் அங்கு வந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென அந்த தாயை வெளியே இழுத்து வந்த அந்த பெண் அவரை காலால் எட்டி மிதித்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். 

இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தாக்குதலில் காயம் அடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சண்டையை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அந்த பெண்ணிற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வீடியோவை பார்த்த போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி இது குறித்து அந்த மூதாட்டி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்...