கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு - மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

14 June 2021

இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்..  


ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைபிடிப்பதால் தொற்று குறைந்துள்ளது

விதிமுறைகளை பின்பற்றி நடந்துக்கொண்ட மக்கள் அனைவருக்கும் நன்றி

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தது

ஆட்சியாளர்களும், மக்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்

மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது

அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றினால் தான் முழு வெற்றி சாத்தியம்

விதிகளை மக்கள் பின்பற்றுவதால் தான் தொற்று குறைந்துள்ளது

எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்

கொரோனா கட்டுக்குள் தான் வந்துள்ளது. முற்றுப்புள்ளி இல்லை

மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மக்களின் நெருக்கடிகளை அரசு உணர்ந்திருக்கிறது

கொரோனா குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை கொடுத்துள்ளோம்

சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது

கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதே அரசின் நோக்கம்

அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது