ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

12 January 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.


 முன்னதாக, ஜனவரி 23-ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு, அன்றைய தினம் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நடைபெறவுள்ள இந்த முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களும் பிரதமருடன் இணைந்து பங்கேற்க உள்ளனர்.


மதுரையில் இதற்கான இடத்தைத் தேர்தல் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போது பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.