தேசியப் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை

26 January 2026

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவையொட்டி, நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக புதுடெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


இந்த நிகழ்வின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகள் அவரை வரவேற்றனர். வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து குடியரசு தின அணிவகுப்பை பிரதமர் பார்வையிட்டார்.