கோவை கொடிசியா வளாகத்தில் நாளை மறுநாள் புதன் கிழமை இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தர உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் பாஜகவினர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனை ஒட்டி கோவையில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை ரோம்கள் பறக்க தடை விதித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்....