அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இன்று பிரதமர் மோடி ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா இடையே உலகளாவிய விரிவான மூலோபாய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "அதிபர் ட்ரம்புடன் நட்பான சுவாரசியமான உரையாடலை நடத்தினேன் என தெரிவித்தார் மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை பற்றி விவாதித்தோம். உலகளாவிய அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து செயல்படும்" என்று பதிவிட்டு உள்ளார்.