முகப்பு திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்று சாதனை: புதிய மேயர் வி.வி.ராஜேஷுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் புதிய மேயராகப் பொறுப்பேற்றுள்ள வி.வி. ராஜேஷ் மற்றும் துணை மேயராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ். ஆஷா நாத் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் "பண்டிகைக் காலத்தின் நடுவிலும், 2026-ம் ஆண்டு தொடங்கும் வேளையிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் வி.வி. ராஜேஷ் மேயராகவும், ஆஷா நாத் துணை மேயராகவும் பொறுப்பேற்றது ஒரு வரலாற்றுச் சாதனையாகும் .கேரளாவில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மேலாதிக்கம் செலுத்தி வருவதாகவும், அவர்களின் மோசமான நிர்வாகம், ஊழல் மற்றும் வன்முறை கலாசாரத்தை மக்கள் பார்த்து வருவதாகவும் பிரதமர் விமர்சித்துள்ளார். டெல்லியில் கூட்டணியாகச் செயல்படும் காங்கிரஸும் இடதுசாரிகளும், கேரளாவில் மட்டும் எதிரிகளைப் போல நடிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் "மேட்ச் பிக்ஸிங்" அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.