மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக ஜோடான், ஓமன், எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நேற்று ஓமன் நாட்டிற்கு சென்றார்.
அங்கு இந்தியா ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
மேலும் இந்திய ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உரையாற்றிய பிரதமர் மோடி இந்த உச்சி மாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டில் மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலும் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ஓமனின் முதல் தர விருது- தி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் என்ற விருதை மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வழங்கி கௌரவப்படுத்தினார். இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 வது வெளிநாடுகளில் உயரிய விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது...