மலேசியாவில் 500 தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி பெருமிதம்

25 January 2026

பிரதமர் நரேந்திர மோடி தனது 130-வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) வானொலி உரையில், மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதில் அந்நாட்டு இந்திய சமூகத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார். குறிப்பாக, மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அங்கு தமிழ் மொழியுடன் பிற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், தெலுங்கு மற்றும் பஞ்சாபி போன்ற பிற இந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒடிசி நடனம் மற்றும் பாவல் இசை போன்றவற்றின் மூலம் இந்தியா - மலேசியா இடையே வலுவான கலாசாரப் பிணைப்பு நிலவுவதையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.