காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்த்தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு இன்று தொடர்பு கொண்டு பேசிய போது இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய உறவை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்த பிரதமர் அலுவலகம் சார்பில் இன்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. அதில் காசா அமைதி திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு தலைவர்களும் பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டதுடன் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் பூஜ்ஜியம் சகிப்புத்தன்மையை கொண்டிருக்கிறோம் என மீண்டும் வலியுறுத்தினார். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என ஒப்புக்கொண்டனர் எனவும் செய்தி பொறுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...