உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு

07 February 2026

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் இடையேயான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "உலகத்துடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகத் தமிழ் மொழி திகழ்கிறது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும், தமிழ் இலக்கியம் முடிவில்லாதது என்றும் பாராட்டிய அவர், மத்திய அமைச்சரவையில் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.


மேலும், இந்தியர்களுக்கும் மலேசியர்களுக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருப்பதாகவும், மலாய் மொழிக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் பிரதமர் இந்த நிகழ்வின் போது வெளியிட்டார்.