பிரதமர் மோடி - இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு

16 February 2026

டெல்லி பாரத மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இந்தியா வருகை தருகிறார்.


இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 17) மும்பை லோக் பவனில் பிரான்ஸ் அதிபரைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியா - பிரான்ஸ் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மதிப்பாய்வு செய்யவுள்ளனர். மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உச்சிமாநாட்டில் பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்ளிட்ட 45 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.