டெல்லியில் இந்திய ஏ.ஐ. தாக்க எக்ஸ்போ 2026: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
15 February 2026
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (பிப்ரவரி 16) முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை நடைபெறவுள்ள "இந்திய ஏ.ஐ. தாக்க எக்ஸ்போ 2026" (India AI Impact Expo 2026) கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். சுமார் 70 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆய்வு மையங்கள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஒரு பகுதியாக 'ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடும்' நடைபெற உள்ளது. உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறும் முதலாவது உச்சி மாநாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இதில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான் மற்றும் சுலோவேக்கியா ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இந்தியா வருகை தருகின்றனர்.