பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று எத்தியோப்பியாவிற்கு சென்றார். இந்த நிலையில் அங்கு விமான நிலையத்தில் அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது அலி பிரதமரை வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் மோடி ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும் தகவல் தொடர்பு பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன. மேலும் இரண்டு நாடுகளும் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம் என கூறினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான "தி கிரேட் ஹானர் நிசான் ஆப் எத்தியோப்பியா” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார் மேலும் இந்த விருது பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்கப்பெற்ற 28 வது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த விருதை பெறுவதில் நான் பெருமை அடைந்தேன் மேலும் இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார்.