ஆர் ஜே டி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி

30 October 2025

பாரத பிரதமர் மோடி இரண்டாவது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அவமதித்து வட்டன என தெரிவித்தார். மேலும் வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ் ஆர்.ஜேடி தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்த மோடி பீகார் நாட்டு மக்கள் இதைப் பொறுத்துக் கொள்வார்களா என கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிகரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர் ஜே டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல ஆண்டுகளாக பீகாரை ஆட்சி செய்த போதிலும் அவர்கள் மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்தனர் என மோடி தெரிவித்தார்.