சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், மீண்டும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி ஊழியர்களுடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ்-விழுப்புரம்