காந்தி: மதநல்லிணக்கத்தின் அடையாளம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

21 February 2026

மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைத்த 'மறவோம்' என்ற காந்தியடிகளைப் போற்றும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் தொகுப்பு:
காந்தியடிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், அவர் ஆடையைக் குறைத்து எளிமையின் அடையாளமாக மாறியதை நினைவு கூர்ந்த முதல்வர், காந்தி அருங்காட்சியகத்தைப் புதுப்பிக்கத் தமிழக அரசு ₹10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதைக் குறிப்பிட்டார். காந்தி ஒரு தனிமனிதர் அல்ல, அவர் ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் என்றும், ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் உண்மையான அடையாளம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தற்போதைய ஒன்றிய பா.ஜ.க அரசு காந்தியக் கொள்கைகளையும், அவரது பெயரையும் திட்டமிட்டு மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைச் சாடினார். மதவெறி என்பது மனிதத்தையே அழிக்கும் என்று எச்சரித்த அவர், பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும், காந்தியடிகளின் மதநல்லிணக்கமும் தந்தை பெரியாரின் சமூகநீதிப் பார்வையுமே நாட்டிற்குத் தேவை என்றும் வலியுறுத்தினார். மேலும், ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் காந்தியின் கொள்கைகளைக் காப்போம் எனத் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.