தமிழக இளைஞர்களின் சாதனை

06 March 2026

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2-ஆம் இடத்தையும், ராஜா முகைதீன் 7-ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வில் தமிழகத்திலிருந்து தேர்ச்சியடைந்த சுமார் 60 பேரில், 56 பேர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் முதல் பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழக இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் சாதனைகளைச் செய்வார்கள் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.