கலால் மற்றும் போதை பொருள் தடுப்பு படையினர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து இன்று ஜஸ்வாள் மாவட்டம் சீலிங் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ எடையுள்ள மெத்தம்பேட்டைமையின் போதை மருந்து பொட்டலங்களையும் 49 சோப்பு பெட்டிகளில் 77 கிராம் எடையுள்ள ஹெராயனையும் வைத்திருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....