நர்ஸை மிரட்டி தாலி சங்கிலி பறிப்பு
25 October 2025
விழுப்புரம்: நர்ஸை மிரட்டி தாலி சங்கிலி பறிப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, இரவுப் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிய நர்ஸ் நித்யா (27) என்பவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலிச் சங்கிலியை இரு மர்ம நபர்கள் கத்தி காட்டி மிரட்டி பறித்துச் சென்றனர்.
நித்யாவின் கூச்சலால் பொதுமக்கள் குற்றவாளிகளை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.