கள்ளக்குறிச்சியில் சிறுவன் உயிரிழப்பு: சோகம்
கள்ளக்குறிச்சி, நவம்பர் 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்-கற்பகம் தம்பதி. இவர்களது மகன் தருண், நேற்று காணாமல் போனார். இந்நிலையில், இன்று பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் பெற்றோர்கள் சார்பாக பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முடிவில், சிறுவன் தருண், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொற்றவை செய்தியாளர்,
ஐயப்பன்.