எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களில் ஒன்றாகும் திருப்பூரில் பெரிய கடை வீதி.
மந்தமாக நடக்கும் ரோடு பணி குடிநீர் குழாய்கள் உடைப்பு சாக்கடை கால்வாய் அடைத்தல் என எப்போதும் ஏதாவது ஒரு பணி நடந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பகுதியில் தான் நொய்யல் வீதி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியும் பழனியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் மாணவர்கள் அங்கன்வாடி குழந்தைகள் தினமும் போய்வரும் பகுதியாகும்.
மேலும் வணிக கடைகள் வழிபாட்டுத் தலங்கள் அதிகமான பிரியாணி கடைகள் இறைச்சி கடைகள் இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாகும்.
இப்படியான இந்த இடத்தில் நீண்ட காலமாக மிகவும் பலவீனமாக இருந்த மின் மாற்றி மீது டெம்போ வேன் மோதியதில் அந்த மின்மாற்றி அப்படியே சரிந்து விழுந்தது இதனால் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர், அதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்குச்செல்லும் மின்சாரத்தை நிறுத்தினர்.
இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர் அதன் பின் மின்வாரிய ஊழியர்கள் சரிந்து விழுந்து கிடந்த மின்மாற்றியை சீரமைத்து மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இருந்தும் இரவு முழுவதும் இப்பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
மா.ஜாபர் அலி திருப்பூர்