மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் பெய்த கன மழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக காசோன்ஸ் ஆற்றங்கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டது மட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதற்கான மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 41 பேர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீட்பு பணிக்காக 8000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.