தமிழக நாயுடு கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சிப்பாடி எம் கே எம் டெக்ஸ்டைல் அலுவலகத்தில் நடைபெற்றது

03 December 2025

தமிழக நாயுடு கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 குறிஞ்சிப்பாடி எம் கே எம் டெக்ஸ்டைல் அலுவலகத்தில் நடைபெற்றது





கூட்டம் நடவடிக்கைகள் பின்வருமாறு
தலைமை  VTP ஜனார்த்தனன் நாயுடு மாவட்ட செயலாளர்.

முன்னிலை, என் ரவி நாயுடு மற்றும் எம் கே எம் மணிகண்டன் நாயுடு, துணைத் தலைவர், டி ஆர் ராமலிங்கம் நாயுடு ஒன்றிய தலைவர்,பாரிவேல் நாயுடு நகரத் தலைவர்,சிவசண்முகம் நாயுடு,செல்வம் நாயுடு நகரத் தலைவர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள் எஸ் ரங்கராஜ் நாயுடு மாநில பொது செயலாளர்,
முருகன் நாயுடு மாநில தலைவர்,
 முருகையன் நாயுடு செயல் தலைவர்,
 கார்த்திகேயன் நாயுடு பொருளாளர்,
செங்குட்டுவன் நாயுடு மாநில தலைவர் 
கண்ணபிரான் நாயுடு துணைச் செயலாளர்கள்
ஜனார்த்தனன் நாயுடு செயற்குழு உறுப்பினர், 
பி கே பெருமாள் நாயுடு செயற்குழு உறுப்பினர், 
ஆகியோர் கலந்து கொண்டனர். 

கௌரவ அழைப்பாளராக  புருஷோத்தமன் நாயுடு நெய்வேலி, செல்வம் நாயுடு வடுகபாளையம், புகழேந்தி நாயுடு திட்டக்குடி  பரதூர் பொன்னன் கோவில்  ரவிக்குமார் நாயுடுகலந்து கொண்டு சிறப்பித்தனர்

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தோழமை சங்கங்கள் திட்டக்குடி நாயுடு சங்கம் விருதாச்சலம் நாயுடு சங்கம் பொடுகு பாளையம் நாயுடு சங்கம் கம்மவார் நாயுடு சங்கம் வைஷ்ணவ நாயுடு சங்கம் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவர்களின் ஆதரவை தமிழக நாயுடு கூட்டமைப்பிற்கு உறுதியளித்தனர்.

கௌரவ ஒருங்கிணைப்பாளராக லட்சுமிபதி நாயுடு பாண்டிச்சேரி கவர நாயுடு மகாஜன சங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்

கடலூர் மாவட்ட கவுரவ தலைவராக எஸ் வெங்கடேஷ் நாயுடு அவர்கள் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் பதவியை ஏற்றுக்கொண்டார்

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்த கிளை மற்றும் சிறு சங்கங்கள் அனைத்தையும் தமிழக நாயுடு கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தின் நன்றி உரையாக கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாராம் நாயுடு அவர்கள் கூறினார் உடன் இளைஞர் அணி நிர்வாகிகள்  சாரநாத் நாயுடு மதுசூதனன் நாயுடு  சந்தோஷ் நாயுடு  வெங்கடாசலம் நாயுடு திரு துரைராஜ் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிலை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பெரும்பான்மையாக கலந்து கொண்டுஆலோசனைக் கூட்டத்தை சிறப்படைய செய்தனர்

கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 
1. வருகிற மார்ச் மாதம் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறுவதற்கு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
2. தமிழக நாயுடு கூட்டமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
3. எதிர்வரும் 2026 தேர்தலை தமிழக நாயுடு கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கலந்து ஆய்வு செய்யப்பட்டது. நாயுடு சமுதாய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 கொற்றவை செய்திகளுக்காக செய்தியாளர்  Pஜெகதீசன்