வேலுநாச்சியார் நினைவுதினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக வெற்றி கழகத்தினர் ...

25 December 2025

வேலுநாச்சியார் நினைவுதினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக வெற்றி கழகத்தினர் ...


வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.




கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரமும் தியாகமும் நினைவுகூரப்பட்டது

"வீரமங்கை வேலு நாச்சியார் பெண்கள் விடுதலைக்கும், நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னோடியாக விளங்கியவர். அவரின் நினைவை போற்றும் வகையில் இந்த மரியாதை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது”
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட வேலு நாச்சியார் திருவுருவப்படம்
மாலை அணிவித்து மலர் தூவும் கட்சி
நிர்வாகிகள் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினார்கள் ...


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்