மேகாலயா நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
06 February 2026
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர். நேற்று முதற்கட்டமாக 16 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று தொடர்ந்த மீட்புப்பணிகளில் மேலும் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.