நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டம்

27 January 2026

நாடாளுமன்றத்தின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 28) தொடங்க உள்ள நிலையில், இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கும் இக்கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதேவேளையில், இக்கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.