செஞ்சி -கனமழை குறித்து ஆலோசனை கூட்டம்
23 October 2025
செஞ்சி -கனமழை குறித்து ஆலோசனை கூட்டம்
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள SA.ராமனை நேற்று (அக்22) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்தார்.
அப்போது செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்