பல்லடம்; கூடுதல் ஆட்டோக்கள் நிறுத்த எதிர்ப்பு.மறியல் கடும் போக்கு வரத்து பாதிப்பு

15 November 2025

பல்லடம் பஸ் நிலையம் முன்பு 40.ஆட்டோக்கள் நிறுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆட்டோக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டுக்கின்றன.

இதனிடையே பல்லடம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கும் அதே இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதிக்கி தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதைக்  காரணம் காட்டி அரசு அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுனர்களின் கோரிக்கைக்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் வேறு பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் பஸ் நிலையம் முன்பு ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர்.

இதனால் அங்கு அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றி மோதல் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள், இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை.  இந்நிலையில் கூடுதல் ஆட்டோக்களை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அங்கு ஆட்டோகளை நிறுத்தி சவாரியில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் பஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து பல்லடம் பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை கொட்டியது இருந்தும் அவர்கள் கொட்டும் மழையிலும் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலிசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஓட்டுநர்கள் மறியலை கைவிட மறுத்ததுடன் போலிசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அனுதியின்றி மறியலில் ஈடுபட்டதாக கூறி ஓட்டுனர்கள் 40பேர் பெண்கள் 20பேர் சிறுவர் சிறுமியர்கள் 13பேர் என 73பேரை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின் அனைவரும் மாலையில் விடுவிக்க ப்பட்டனர். 

ஆட்டோ ஓட்டுனர்களின் திடீர் மறியலால் பல்லடம் நகர் பகுதிகளிலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் செய்வதறியாது பெரும் சிரமங்களுக்கு ஆளாகியினர்.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.