கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்வு
29 November 2025
கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது நேற்று கிலோ 2,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, இன்று ஒரே நாளில் 3,000 ரூபாய் உயர்ந்து 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பூ வரத்து குறைந்தது, மேலும் நாளைய சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தேவை அதிகரித்தது விலை உயர்விற்கு காரணமாகியுள்ளது. பிச்சிப்பூவும் 1,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. வாங்குபவர்கள் அதிகம், வரத்து குறைவு போன்ற காரணத்தால் விலை மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது.