ஆசிரியகளின் அக்கரையில் ஆத்திரம்.?.மாணவர்கள் சாலை மறியல்.

22 November 2025

 
திருப்பூர் நகர் பகுதியில  நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6.ம் வகுப்பு முதல் 12.ம் வகுப்பு வரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் மேலும் அரசின் மிக பிரபலமான பள்ளி என்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் மாணவர்கள் பஸ்கல் மூலம் இங்கு தினமும்  வந்து படித்து செல்கின்ற னர்.இந்நிலையில் மாணவர்களுக்கு 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு வர இருப்பதால் அது சம்பந்தமாக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன 

இந்த சிறப்பு வகுப்புகள் சில நேரம் இரவு 7.மணி வரை நடப்பதால் மாணவர்கள் வீட்டுக்கு செல்வ தற்கு பஸ் போக்குவரத்து கிடைப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் சில நேரங்களில் 8:00 மணி வரை கூட சிறப்பு வகுப்புகள் நடைபெறு வதாக சொல்லப்படுகிறது இதனால் மாணவர்கள் காலை பள்ளிக்கூடங்களுக்கு வர காலதா மதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் அவர்களை நேரத்திற்கு வரும்படி அறிவுறுத்தியும் கண்டித்தும் வந்துள்ளனர் என்று கூறப்படு கிறது இதனால் 

ஆத்திரப்பட்ட மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20-11-2025 அன்று காலை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் மாணவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களை அங்கிருந்து அருகில் உள்ள டவுன்ஹால் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றனர் 
மேலும் அங்கு விரைந்து வந்த கல்வி அதிகாரி காளிமுத்து மற்றும் போலீசார் மாணவர்களிடம் 
விசாரணை மேற்கொண்டனர் அப்போது மாணவர்கள் ஆசிரியர்கள் ஆபாசமாக திட்டுவதாகவும் தலைமை ஆசிரியை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைளை வைத்துள்ளனர் அதை மனுவாக எழுதி வாங்கிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர் அதைத்தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர் 

இது சம்பந்தமாக ஆசிரியர்கள் கூறும்போது உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமாக ஜனவரி மாதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு முன்னதாகவே சிறப்பு வகுப்புகள் தொடங்கப் பட்டன இதைப் பிடிக்காத சிலர் மாணவர்களை பயன்படுத்தி இதுபோன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்றனர்.

ஆசிரியர்களின் நிபந்தனைகளை மாணவர்கள் பொறுத்துக் கொண்டு ஏற்க மறுக்கும் போது அவர்கள் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் இது போன்ற பொறுமையற்ற சகிப்புத்தன் மையற்ற மாணவர்களை பார்க்கும் போது இவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்று மாணவர்களின் மறியலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் பேசிச் சென்றனர்.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்