அ.மமு.க.சார்பில் நடைபெறவுள்ள மாராத்தானில் திரளாக கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் அழைப்பு

05 December 2025

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் வருகிற 7.ம் தேதி ஜனநாயகத்துக்கான மாரத்தான் ஓட்டம் என்ற பெயரில் காலேஜ் ரோட்டில் உள்ள சௌடாம்பிகா திருமண மண்டபத்தில் காலை ஆறு மணிக்கு தொடங் கும் பின்பு மீண்டும் அங்கேயே நிறைவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
போட்டியின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெறும் இதில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். கல்லூரி மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் என ஆறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன ஒவ்வொரு பிரிவிலும் முறையே நாலு முதல் 20 இடங்களில் வருபவர்களுக்கு மொத்தம் 108 குக்கர் பரிசாக வழங்கப்படும்
இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார் மேலும் அவர்கூறுகையில்
வரும் 8.ம் தேதி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரிலும் 9.ம் தேதி மாலை 3 மணிக்கு கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் டி டி வி தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அ.ம.மு.க திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் திருப்பூர் நகராட்சி மேயருமான அ விசாலாட்சி கூறினார்கள்.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.