வழிபாட்டுக்கு வழிவகை செய்யுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வஞ்சிநகர் முஸ்லிம்கள் கோரிக்கை.

02 February 2026

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் எதிர் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொழுவதற்கு இடம் ஒதிக்கித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு  வைத்தனர்.

மனுவில் அவர்கள் கூறியதாவது நாங்கள் வசிக்கும் அரசு அடுக்கு மாடி குடியிருப்பில் 400.க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன நாங்கள் தொழுவதற்கு அங்கு பள்ளிவாசல் கிடையாது இந்நிலையில் வரும் 2026.ம் வருடம் ரம்ஜான் பெருநாள் பண்டிகை வர உள்ள சூழ்நிலை யில் நாங்கள் நோன்பு நோற்று தொழுவதற்கும் நோன்பு நோற்றவ ர்களுக்கு கஞ்சி காட்சி கொடுப் பதற்கும் வழக்கம்போல் இடம் ஒதிக்கியும் தற்காலிகமாக கூடாரம் போன்றவைகள் அனுமதியும் தர வேண்டும் என கூறியிருந்தனர்.

செய்தியாளர்.
மா.ஜாபர் அலி திருப்பூர்