தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை பகுதியில் அமைந்துள்ள மங்களம் அருவியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக மங்கலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை மலைப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அருவிகளிலுமே நீர்வரத்து தொடர்ந்து அதிகமாகியுள்ளது. மழையின் அளவு அதிகமாக நீர் வரத்தும் அதிகமாகும் எனவே மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.