பாவத்தின் சம்பளம் மரணம் மனைவியை கொன்று விட்டு கனவன் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்ததால் பரபரப்பு

02 December 2025

நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்தவர் சிவன்பாண்டி மகன் பாலமுருகன்(வயது 34) கட்டடத் தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபிரியா(30) இருவரும் காதலித்து
திருமணம் செய்து கொண்டதாக சொல்லப் படுகிறது இவர்களுக்கு இரு மகன் மற்றும் 1.1/2 வயதில் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது இந்தநிலையில்.


கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி ஸ்ரீபிரியா கணவன் பாலமுருகன் மற்றும் குழந்தைகளை பிரிந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பனியாற்றி வந்துள்ளார் இதன் இடையே 

பாலமுருகனின் உறவினராக இசக்கி என்பவருடன் ஸ்ரீபிரியாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது இவர்களின் இந்த கள்ளக்காதலால் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இசக்கி பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார் இதனால் கோபம் அடைந்த பாலமுருகன் கோவைக்கு வந்து மகளிர் விடுதியில் தங்கியிருந்த மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்து ள்ளார் ஆனால் ஸ்ரீபிரியா எனக்கு உன்னோடு குடும்பம் நடத்த விருப்பமில்லை வரவே முடியாது என மறுத்துள்ளார் இதனால் விடுதி வளாகத்தி லேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த
பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அறுவாளை எடுத்து மனைவி ஸ்ரீபிரியாவை சராமாறியாக வெட்டியுள்ளார் இதனால் சம்பவ இடத்திலேயே ஸ்ரீபிரியா மரணமடைந்து ள்ளார் பின்பு பாலமுருகன் துளிகூட வருத்தமோ
கவலையோ பதட்டமோ படாமல் கால் மேல் கால் போட்டவாறு தான் கொன்ற மனைவியின் சடலம் தெரியும் வகையில் போட்டோ எடுத்து பாவத்தின் சம்பளம் மரணம் என (பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி).வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதியில் தங்கி இருந்தவர் கள் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த இரத்தினபுரி போலிசார் மனைவியின் சடலத்தின் அருகில் நின்று கொண்டு இருந்த பாலமுருகனை கைது செய்தனர் பின்பு ஸ்ரீபிரியா வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலிசார் மேற்கொண்டு  பாலமுருகனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவியைக் கொன்று விட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த சடலத்துடன் போட்டோ எடுத்து பாவத்தின் சம்பளம் மரணம் என எழுதி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து கணவரின் இந்த செய்தி நாடெங்கும் மக்கள் மனங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது 

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.