மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம்-100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என மக்களால் அழைக்கப்பட்டு அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் இந்தத் திட்டத்தை நீக்கிவிட்டு கிராமப்புற வேலைவாய்ப்பு பிணைக்கும் வகையில் வேலை வாய்ப்புக்கான வளர்ச்சி அடைந்த பாரத உத்திரவாத திட்டம் என பெயர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அறிமுகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனை ஒட்டி மக்களவையில் மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மக்களவை கூடியதும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமலியில் ஈடுபட்டனர். இந்த கடும் சலப் சலப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் இருக்கை அருகே வந்து முற்றுகையிட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு மக்களவை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது....