ஈஷா மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
12 February 2026
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறும் 33-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இவ்வாண்டு முதல்முறையாக சத்குரு அவர்கள் ஆதியோகி சிலை அருகில் உள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்ய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.