150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

27 November 2025

உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது...



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை கோபூஜை, குதிரை பரிவாரங்களுடன் துவங்கி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அக்னி ஆராதனம் கும்ப ஆராதனம் ததுக்த பிரதான ஹோமங்கள் மகாபூர்ணாஹுதி யாத்ராதானம் தொடர்ந்து திருக்கோவிலூர் ஸ்ரீமந் எம்பெருமானார் ஜீயர் 26 ஆவது பட்டம் உ வே பணி தேஹளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கும்பம் புறப்பட்டு கோவில் கோபுரத்தை அடைந்து ஆஞ்சநேயர்,  கருடாழ்வார் பரிவாரங்களுக்கும் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் பூ.கிள்ளனூர்,  நாச்சியார் பேட்டை, மங்கலம்பேட்டை உளுந்தூர்பேட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்...


இரா.வெங்கடேசன்,  சப்எடிட்டர் 
கொற்றவை நியூஸ்